“உங்களுடன் ஸ்டாலின் முகாம்” 524 மனுக்களுக்கு உடனடி தீர்வு
மேட்டுப்பாளையம், செப்.24- மேட்டுப்பாளையத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 524 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணை உடனடியாக பயனாளி களுக்கு வழங்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்காக உங்களுடன் ஸ்டா லின் திட்ட முகாம் செவ்வாயன்று நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் மெஹ ரிபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் ஆணையா ளர் அமுதா, துணை தலைவர் அருள்வடிவு முனுசாமி முன்னிலையில் நடந்தது. நகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீராம்,ஓ.கே.ஆர்.நடராஜன், காளியம்மாள் மல்லி சுப் பிரமணியம், அனிதா புருஷோத்தமன் ஆகியோர் வர வேற்றனர். இதில், 13 அரசு துறைகளை சேர்ந்த 43 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அதற்குரிய அரசுத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர். இதில் மகளிர் உரிமை தொகை கோரி 97, வீட்டு வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட இதர மனுக்கள் 582 என மொத்தமாக 679 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 524 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப் பட்டு அதற்கான ஆணை உடனடியாக பயனாளிக ளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக தெற்கு நகர செயலாளர் முனுசாமி உள்ளிட்ட முக்
ஆட்சியர் அலுவலகத்தில் இசைக்கலைஞர்கள் மனு
கோவை, செப்.24- சரஸ்வதி துணை நாதஸ்வரம், தவில் இசைக்கலை ஞர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இசைக் கருவிகளை வாசித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில், போதிய வேலைவாய்பில்லாமல் அவதி யுறும் தங்களுக்கு இலவச வீட்டுமனை, பேருந்து கட்ட ணத்தில் 100 சதவீதம் சலுகை, கலைஞர்கள் வாழும் ஊரில் உள்ள கோவில்களில் நிரந்தர வேலை, இசைக் கலைஞர்களுக்கு இலவசமாக வாத்திய கருவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சரஸ்வதி துணை நாதஸ்வரம், தவில் இசைக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் புதனன்று மனு அளித்தனர். மனு அளிக்க வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தவில் மற்றும் நாதஸ்வரம் இசைக்கருவிகளை இசைத்து கோரிக்கையை வலியுறுத்தினர்.
போதை ஸ்டாம்புகள் விற்ற மூன்று பேருக்கு 5 ஆண்டு சிறை
கோவை, செப்.24- போதை மருந்து தடவிய ஸ்டாம்புகளை கடத்தி விற்பனை செய்த மூன்று பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலை வெள்ளக் கிணறு அருகே போதைப் பொருள் விற்பனை நடப்பதாக போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது போதை மருந்து தடவிய ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சாவை விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவையைச் சேர்ந்த முகமத் தபரீஸ், பிரதீப் ராஜ், விவியின் ஆனந்தகுமார் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் மூன்று பேரிடம் இருந்து போதை மருந்து தடவப்பட்ட ஸ்டாம்புகள், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு நடை பெற்றது. கைதான மூன்று பேரும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மருந்துகள் தடவிய ஸ்டாம்புகளை பலருக்கு கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை போதைப்பொருள் தடுப்பு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை புதனன்று நடைபெற்றது. இதை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் தலா ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 50,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.